தேங்காய்களை உடைத்து விவசாயிகள் போராட்டம்


தேங்காய்களை உடைத்து விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 9 Aug 2023 3:45 AM IST (Updated: 9 Aug 2023 3:45 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவில் தேங்காய்களை உடைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூர்


கிணத்துக்கடவு


கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவில் முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி இணைந்து தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்க முயற்சி எடுக்காத தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தேங்காய்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார்.

இதில் பாமாயில் இறக்குமதிக்கு தடை செய்ய வேண்டும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்ய வேண்டும், கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதையொட்டி கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரமூர்த்தி, செந்தில்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



Related Tags :
Next Story