அழுகிய சின்ன வெங்காயத்தை தரையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்


அழுகிய சின்ன வெங்காயத்தை தரையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்
x

அழுகிய சின்ன வெங்காயத்தை தரையில் கொட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

திருச்சி

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் பூ.விசுவநாதன் மற்றும் விவசாயிகள் கலெக்டர் அலுவலக வாசல் முன்பு சின்ன வெங்காயத்தை தரையில் கொட்டி போராட்டம் நடத்தினர்.

அப்போது, துறையூர் தாலுகாவில் நரசிங்கபுரம், செல்லி பாளையம், பெருமாள் பாளையம், அம்மம்பாளையம், வேங்கடத்தானூர், செங்காட்டுப்பட்டி, ரெங்கநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் 2022-23-ம் ஆண்டில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டது. அந்த பயிர்களுக்கு காப்பீடும் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தொடர் மழையால் சின்ன வெங்காயம் அழுகி பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே சின்ன வெங்காயத்திற்கு காப்பீட்டு தொகை பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்தினர். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.


Next Story