கண்களில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் போராட்டம்

கண்களில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் போராட்டம்
கோயம்புத்தூர்
சுல்தான்பேட்டை
தமிழக அரசு கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5-ந்தேதி முதல் சுல்தான்பேட்டை ஒன்றியம் பச்சார்பாளையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் 10-வது நாளான நேற்று விவசாயிகள் கண்களில் கருப்பு துணி கட்டி, கைகளில் பலூன் ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் மாவட்ட செயலாளர் வேலு மந்திராசலம், பச்சையப்பன், பரமேஸ்வரன், வீரக்குமார், வெல்கேஷ் பெல்லம்பட்டி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story