சாக்குப்பையை உடலில் கட்டிக்கொண்டு விவசாயிகள் போராட்டம்
சாக்குப்பையை உடலில் கட்டிக்கொண்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
மலைக்கோட்டை:
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 51-வது நாளான நேற்று சாக்குப்பையை உடலில் கட்டிக் கொண்டு விவசாயிகள் நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
அப்போது விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. குறைந்தபட்ச ஆதார விலையையாவது விவசாயிகளுக்கு கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை மத்திய, மாநில அரசுகள் பெற்றுத்தர வேண்டும். கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை காவிரியில் திறந்துவிட வேண்டும். இல்லையென்றால் அனைவரும் உடுத்த உடையில்லாமல் சாக்குப்பையைத்தான் உடுத்திக்கொள்ள நேரிடும் என்று உணர்த்தும் நோக்கில் போராட்டத்தில் ஈடுபட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் விவசாயிகளை காப்பாற்றக்கோரி பல்வேறு கோஷங்களையும் எழுப்பினர்.