கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து விவசாயிகள் நூதன போராட்டம்


கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து விவசாயிகள் நூதன போராட்டம்
x

கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் கடந்த 19 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 20-ம் நாளான நேற்று விவசாயிகளை விவசாயத்தில் இருந்து விரட்டி விட்டு நெற்றியில் விபூதி பட்டையும், கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் சாமியாராக ஆக்கிவிட்டதை காட்டும் விதமாகவும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு லாபகரமான விலை தர வேண்டும். உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசையும், மத்திய அரசையும் கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story