22-வது நாளாக விவசாயிகள் போராட்டம்
22-வது நாளாக விவசாயிகள் போராட்டம்
கோயம்புத்தூர்
சுல்தான்பேட்டை
தமிழகத்தில் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும், நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் மற்றும் கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5-ந் தேதி முதல் சுல்தான்பேட்டை ஒன்றியம் பச்சார்பாளையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் 22-வது நாளான நேற்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கையில் நீரா பானம் ஏந்தி போராட்டம் நடத்தினர். இதில் மாநில துணை தலைவர் அரசேந்திரன், கோவை மாவட்ட செயலாளர் வேலு மந்திராச்சலம், திருப்பூர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story