தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x

பிரம்மதேசம் மின்வாரிய அலுவலகம் முன்பு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

செய்யாறு

விவசாயம் செய்ய தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க கோரியும், விவசாயத்திற்காக தமிழக அரசு வழங்கும் மும்முனை மின்சாரத்தை முறையாக வழங்காததை கண்டித்தும், மின் ஊழியர்களின் விரோத போக்கை கண்டித்தும் பிரம்மதேசம் மின்வாரிய துணை மின் நிலையம் முன்பு தமிழக கட்சி சார்பற்ற விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

விவசாயி பச்சையப்பன் தலைமை தாங்கினார். தமிழக கட்சி சார்பற்ற விவசாய சங்க செய்தி தொடர்பாளர் வாக்கடை புருஷோத்தமன் கண்டன உரை ஆற்றினார்.

இதில் பிரம்மதேசம் பகுதியில் விவசாய நிலங்கள் வழியாக தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயரமாக மாற்றி அமைக்க வேண்டும், சேதமடைந்த மின்மாற்றிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் காமராஜ், சுரேஷ், ஏகாம்பரம் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து நாட்டேரி செல்லும் வழியில் உள்ள பழுதான நிலையில் உள்ள மின்மாற்றிக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினர்.


Related Tags :
Next Story