கடலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கடலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விவசாயிகளின் போராட்டத்தை சீர்குலைத்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்து, கொடூர தாக்குதலுக்கு காரணமான மத்திய உள்துறை இணை மந்திரி அஜய்மிஸ்ராடேனியை பதவியை விட்டு நீக்கி கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் கடலூரில் கருப்புக்கொடி ஏந்தியும், கோரிக்கை அட்டை அணிந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் கருப்பையன் தலைமை தாங்கினார். தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் செயலாளர் பொன்முடி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் சரவணன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பழனிவேல், இந்திய தேசிய காங்கிரஸ் மாநில செயலாளர் வக்கீல் சந்திரசேகரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் காவிரி டெல்டா தலைவர் இளங்கீரன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட கவுன்சில் தலைவர் மனோகரன், சி.ஐ. டி.யு. மாநிலக்குழு ஜீவானந்தம், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் குளோப், ஏ.ஐ.கே.எஸ். மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் பாலு, விவசாய சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார், விவசாயிகள் விடுதலை முன்னணி அருள்தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.