விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் 22-வது நாளாக நீடிப்பு
விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் 22-வது நாளாக நீடித்தது.
கீழ்பென்னாத்தூர்
விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் 22-வது நாளாக நீடித்தது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நிறுவனர் வக்கீல் ஈசன்முருகசாமி தலைமையில் செயல்பட்டு வருகிறது.
சங்கத்தின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கடந்த 5-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் கீழ்பென்னாத்தூரில் உள்ள மார்க்கெட் கமிட்டி எதிரில் நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். நேற்று 22-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நீடித்தது.
இதில் சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளர் நேதாஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும். எம்.எஸ்.சாமிநாதன் அறிக்கையை அமல்படுத்த வேண்டும். ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை மானிய விலையில் வினியோகிக்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், தென்னை, பனைமரங்களில்கள் இறக்குமதி செய்ய அரசு அனுமதி வழங்க வேண்டும்.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது.
ஆகஸ்ட் 5-ந் தேதி வரை 30 நாட்கள் போராட்டம் நடக்றது. அதைத்தொடர்ந்து 7-ந் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கலெக்டரிடம் விவசாயிகள் தனித்தனியாக மனுக்கள் வழங்கும் போராட்டம் நடக்கிறது. இதில் விவசாயிகள் திரளானவர்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் இயற்கை விவசாயிகள் உசிலம்பட்டி அலெக்ஸ், வத்தலகுண்டு சவுந்திரபாண்டியன் ஆகியோரும் கோரிக்கைகளை பேசினர்.