மக்காச்சோளத்தை சேமித்து வைக்கும் விவசாயிகள்


மக்காச்சோளத்தை சேமித்து வைக்கும் விவசாயிகள்
x
தினத்தந்தி 28 Feb 2023 12:28 AM IST (Updated: 28 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

போதிய விலை இல்லாததால் மக்காச்சோளத்தை விவசாயிகள் சேமித்து வைக்கின்றனர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

போதிய விலை இல்லாததால் மக்காச்சோளத்தை விவசாயிகள் சேமித்து வைக்கின்றனர்.

மக்காச்சோளம் சாகுபடி

வெம்பக்கோட்டை ஒன்றியம் குகன்பாறை, மடத்துப்பட்டி, எட்டக்காபட்டி, சத்திரம், சங்கரபாண்டியாபுரம், விளாமரத்துபட்டி, சுப்பிரமணியபுரம், வல்லம்பட்டி, கொட்டமடக்கிபட்டி, செவல்பட்டி, சிப்பிப்பாறை, வால்சாபுரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மானாவாரி பயிரான மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் 4 ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. ஒரு குவிண்டால் தை மாத அறுவடை சமயத்தில் ரூ.2,300 விற்பனையானது.

வரத்து அதிகம்

மக்காச்சோளத்தில் வரத்து அதிகம் காரணமாக குவிண்டாலுக்கு ரூ.300 குறைந்தது. இதனால் அறுவடை செய்வதை விவசாயிகள் நிறுத்திவிட்டனர். மக்காச்சோளம் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஒரு சிலர் இதை இருப்பு வைத்து சேமிக்க இட வசதி இல்லாததால் நஷ்டமடைந்தாலும் பரவாயில்லை என விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும் ஒரு சிலர் விவசாயிகளுக்கான சேமிப்பு கிட்டங்கிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மூலம் மற்றும் அரசின் வேளாண் சேமிப்பு கிடங்கு திட்டங்கள்மூலம் மக்காச்சோளப் பயிர்களை இருப்பு வைத்துள்ளனர்.

விலை இல்லை

இதுகுறித்து மடத்துப்பட்டி விவசாயி தினகரன் கூறியதாவது:-

வெம்பக்கோட்டை பகுதியில் விவசாயிகள் மக்காச்சோளத்தை அதிக அளவில் பயிரிட்டு்ள்ளனர்.

இதில் ஏற்றி, இறக்குதல், சுமை கூலி என டன்னுக்கு ரூ.600 வரை செலவாகிறது. உற்பத்தி செலவுக்கே குவிண்டாலுக்கு ஆயிரம் வரை செலவாகிறது. இதனால் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு குறைந்த அளவில் தான் லாபம் கிடைத்து வருகிறது.

மேலும் மக்காச்சோளம் விளைச்சல் இருந்தும் விலை குறைவால் இருப்பு வைத்தால் மக்காச்சோளத்திற்கு தேவை அதிகம் இருக்கும் போது விலை கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளதால் நல்ல விலைக்காக காத்திருக்கும் விவசாயிகள் காத்து இருக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story