தேங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்
தேங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்
கோயம்புத்தூர்
சாய்பாபாகாலனி
தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை முன்பு தேங்காய் உடைத்து போராட்டம் நடைபெற்றது. மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர். வருகிற 31-ந் தேதிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், சென்னை தலைமை செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று விவசாயிகள் தெரிவித்தனர். இதில் சங்க மாநில தலைவர் சண்முகம் மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story