தேங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்
தேங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்
சுல்தான்பேட்டை
கொப்பரை தேங்காயை கிலோ ரூ.150-க்கு கொள்முதல் செய்ய வேண்டும், ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு பதிலாக உள்ளூர் தேங்காய் எண்ணெயை பயன்படுத்த வேண்டும், தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்க வேண்டும், கள் இறக்கி விற்பனை செய்வதற்கான தடையை நீக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சுல்தான்பேட்டை ஒன்றியம் ஜல்லிபட்டியில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் தேங்காய் உடைக்கும் போராட்டம் மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம், ஊராட்சி தலைவர் ஜோதிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சங்க நிர்வாகிகள் குண்டடம் ராசு, பூராண்டாம்பாளையம் மணி, குள்ளம்பாளையம் தங்கவேலு, முன்னோடி விவசாயி ஜல்லிபட்டி எஸ்.பி. ராமசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.