சாலையில் பருத்தி பஞ்சுகளை கொட்டி விவசாயிகள் மறியல்


சாலையில் பருத்தி பஞ்சுகளை கொட்டி விவசாயிகள் மறியல்
x

கொள்ளிடம் அருகே குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதை கண்டித்து விவசாயிகள் சாலையில் பருத்தி பஞ்சுகளை கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதை கண்டித்து விவசாயிகள் சாலையில் பருத்தி பஞ்சுகளை கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஒழுங்குமுறை விற்பனை கூடம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே எருக்கூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இந்த விற்பனை கூடத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது.அப்போது இதில் கலந்து கொண்ட விவசாயிகள், பருத்தியை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதை கண்டித்து திடீரென விற்பனை கூடம் எதிரில் சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பருத்தி பஞ்சுகளை கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

கடந்த வாரம் நடந்த ஏலத்தில் பருத்தி குவிண்டால் ரூ.12,000-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது குவிண்டால் ரூ.4,000-க்கு குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டதாகவும், இந்த தொகை பயிரிட்ட செலவு கூட கிடைக்கவில்லை எனவும் கூறி விவசாயிகள் கோஷங்கள் எழுப்பினர்.இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் மற்றும் கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதை தொடர்ந்து மறியலை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story