14-வது நாளாக விவசாயிகள் போராட்டம்
கோத்தகிரி நட்டக்கல் பகுதியில் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை கேட்டு 14-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
கோத்தகிரி
பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக கிலோவுக்கு ரூ.33.75 நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாக்குபெட்டா படுகர் நல சங்கத்தின் சார்பில் கோத்தகிரி நட்டக்கல் பகுதியில் கடந்த 1-ந் தேதி முதல் பொரங்காடு சீமை படுகர் நலச்சங்க தலைவர் தியாகராஜன் தலைமையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து 14-வது நாளாக நேற்றும் போராட்டம் நடைபெற்றது. இதில் கக்குளா மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளகோத்தகிரி நட்டக்கல் பகுதியில்மான விவசாயிகள் கலந்து கொண்டனர். மேலும் கோத்தகிரி தாலுகா வியாபாரிகள் நல சங்கம், மார்க்கெட் வியாபாரிகள் சங்கம், கட்டபெட்டு, கீழ் கோத்தகிரி மற்றும் அரவேனு வியாபாரிகள் சங்கங்களை சேர்ந்த வியாபாரிகள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர். இன்று(வெள்ளிக்கிழமை) கோத்தகிரியில் உள்ள பள்ளிவாசல்களில், விவசாயிகளின் போராட்டத்திற்கு உரிய தீர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக சிறப்பு தொழுகை நடத்தப்படும் என்று பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.