20-வது நாளாக விவசாயிகள் போராட்டம்
பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி 20-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
கோயம்புத்தூர்
சுல்தான்பேட்டை
கொப்பரை கிலோ ரூ.150-க்கு கொள்முதல் செய்ய வேண்டும், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், சுல்தான்பேட்டை அருகே பச்சார்பாளையம் கிராமத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 20-வது நாளாக விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கைகளில் காய்கறிகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு நாகமாணிக்கம் தலைமை தாங்கினார். கோவை மாவட்ட செயலாளர் வேலு மந்தராசலம் முன்னிலை வகித்தார். இதில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story