விவசாயிகள் திடீர் தர்ணா


விவசாயிகள் திடீர் தர்ணா
x

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் திடீர் தர்ணா கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு கூடுதல் இழப்பீட்டு தொகை வழங்க கோரிக்கை

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் - நாகப்பட்டினம் 4 வழிச்சாலை அமைக்கும் பணிக்காக விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீட்டுத்தொகை குறைவாக வழங்கப்பட்டுள்ளதை கண்டித்தும், கூடுதல் இழப்பீடு வழங்கக்கோரியும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில் அற்பிசம்பாளையம், சாலையாம்பாளையம், ஆனாங்கூர், ஜானகிபுரம், கண்டமானடி பகுதியில் விவசாய நிலங்கள் 4 வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்டது. விவசாய விளைநிலங்களுக்கு விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் எவ்வளவு தொகை அரசு செலுத்தும் என்பதை விவசாயிகளுக்கு தெரியப்படுத்தாமல் மிரட்டும் தோரணையில் விவசாயிகளை கட்டாயப்படுத்தி கையொப்பம் வாங்கினார்கள். தற்போது கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத்தொகை போதுமானதாக இல்லை. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத்தொகை வழங்கிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மனுவைபெற்றுக்கொண்ட கலெக்டர் மோகன் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.


Next Story