பண்ருட்டியில்அகில இந்திய விவசாய சங்க பேரவை கூட்டம்


பண்ருட்டியில்அகில இந்திய விவசாய சங்க பேரவை கூட்டம்
x
தினத்தந்தி 19 March 2023 6:45 PM GMT (Updated: 2023-03-20T00:16:08+05:30)

பண்ருட்டியில் அகில இந்திய விவசாய சங்க பேரவை கூட்டம் நடைபெற்றது.

கடலூர்


பண்ருட்டி,

பண்ருட்டியில் கடலூர் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்தின் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சரவணன், பொருளாளர் ராமச்சந்திரன், மாவட்ட துணை தலைவர்கள் தட்சணாமூர்த்தி, குமரகுருபரன், மகாலிங்கம், மூர்த்தி மாவட்ட இணை செயலாளர்கள் கற்பனை செல்வம், வாஞ்சிநாதன், செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் தேவநாதன் வரவேற்றார்.

கூட்டத்தில், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 35-வது அகில இந்திய மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அகில இந்திய விவசாய சங்க இணை செயலாளர் ரவீந்திரன் கலந்து கொண்டு அகில இந்திய மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பேசினார்.

மேலும் கூட்டுறவு தேர்தல் குறித்து தமிழ்நாடு கூட்டுறவு சம்மேளன மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களை சேர்ப்பதற்கு உரிய கால அவகாசம் வழங்கிட வேண்டும். வாக்காளர் பட்டியலை திருத்தி அமைக்க வேண்டும். கூட்டுறவு சங்க தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும். உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கவேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதில் மாவட்ட குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட தலைவர் கணேசன் நன்றி கூறினார்.


Next Story