விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நயினார்கோவிலில் வைகை பாசன விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நயினார்கோவில்,
பரமக்குடி தாலுகா நயினார்கோவிலில் வைகை பாசன விவசாயி சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகநாதர் கோவிலுக்கு எதிரே உள்ள வாசுகி தீத்த குளத்திக்கு செல்லும் வழிகள் ஆக்கிரமிப்புகளால் அடைக்கப்பட்டுள்ளது. வாசுகி தீத்ததில் கழிவுநீர் கலக்கிறது. எனவே, ஆக்கிரமிப்பை அகற்றக்கோரியும், கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தியும், மேகதாதுவில் அத்துமீறி அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் என 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட வைகை பாசன விவசாய சங்க தலைவர் ரத்தின சபாபதி, துணை தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர். செயற்குழு உறுப்பினர் முத்து கணபதி, துணை தலைவர்கள் ராமன், ராசு, ஜவகர், ராமசாமி, துணை் செயலாளர் குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காசிநாதன் வரவேற்றார். தென் மண்டல தலைவர் மதுரவீரன் சிறப்புரை ஆற்றினார். இதில் விவசாயிகள் மற்றும் வைகை பாசன விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.