விழுப்புரத்தில்விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். மூர்த்தி, மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொது நீர்நிலைகளை தனியாருக்கு தாரைவார்க்கும் நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023-ஐ திரும்பப்பெற வேண்டும், எந்தவித ஆய்வும் மேற்கொள்ளாமல் ரேஷன்கடைகளிலும், ஊட்டச்சத்து மையங்களிலும் அவசரகதியில் செரியூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சவுரிராஜன், விவசாயிகள் சங்கம் சகாபுதீன், ராமமூர்த்தி, பாலசுப்பிரமணியன், லட்சுமி, ஏழுமலை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story