நெல் வயல்களில் தேங்கி நிற்கும் மழை நீரால் விவசாயிகள் கவலை


நெல் வயல்களில் தேங்கி நிற்கும் மழை நீரால் விவசாயிகள் கவலை
x

வடகாடு பகுதியில் நெல் வயல்களில் தேங்கி நிற்கும் மழை நீரால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

புதுக்கோட்டை

வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த காலங்களில் இப்பகுதிகளில் பருவம் தவறி பெய்த மழையால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். மேலும் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். தற்போது நடப்பு பருவமான சம்பா நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது வயல்களில் நேரடி நெல் விதைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதிலும் ஒரு சில பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள நெல் வயல்களில் தற்சமயம் பெய்து வரும் தொடர் மழையால் நெல் வயல்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலை நீடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதேநிலை நீடித்தால் நெல் பயிரின் வேர்கள் அழுகக்கூடிய நிலை இருப்பதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.


Next Story