மகனை தாக்கியதை தட்டிக்கேட்ட தந்தைக்கும் அரிவாள் வெட்டு - நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்
நெல்லை மாவட்டத்தில் முன் விரோதம் காரணமாக ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை,
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே முன் விரோதம் காரணமாக ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணலி விளைப் பகுதியைச் சேர்ந்த விஜயனுக்கும், கிறிஸ்துதாஸ் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கிறிஸ்துதாஸ் மகன் சூர்யாவை விஜயன் தாக்கிய நிலையில், இது குறித்து கேட்ட கிறிஸ்துதாஸை விஜயன் தனது நண்பர்களுடன் சேர்ந்து அரிவாளால் வெட்டியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Related Tags :
Next Story