தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு
தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
திருநெல்வேலி
பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரியை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 19). இவர் தன்னுடைய நண்பரிடம், அதே பகுதியை சேர்ந்த சங்கரபாண்டி (21) மற்றும் செல்வகுமார் (22) ஆகியோரிடம் சேரக்கூடாது என்று கூறியது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பேச்சிமுத்து வீட்டில் இருந்த போது, அங்கு வந்த சங்கரபாண்டி, செல்வகுமார் ஆகியோர் பேச்சிமுத்து, அவருடைய தந்தை சண்முகம் ஆகியோரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சீவலப்பேரி போலீஸ் நிலையத்தில் பேச்சிமுத்து புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி சங்கரபாண்டி, செல்வகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story