செஞ்சி அருகே சொத்து தகராறில் மகனை கத்தியால் குத்திய தந்தை கைது
செஞ்சி அருகே சொத்து தகராறில் மகனை கத்தியால் குத்திய தந்தை கைது செய்யப்பட்டார்.
செஞ்சி,
செஞ்சி அருகே சொத்து தகராறில் மகனை கத்தியால் குத்திய தந்தை கைது செய்யப்பட்டார்.
சொத்து பிரச்சினை
செஞ்சி அருகே மேல்சேவூர் மதுரா கல்லாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 70). இவரது மகன் நாகேந்திரன் (34). லாரி டிரைவரான இருவருக்கும், கணேசனுக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக அடிக்கடி ஏற்பட்டு வந்துள்ளது.
இந்ந நிலையில் நேற்று முன்தினம் இரவு மகேந்திரனிடம் எனது சொத்தில் நீ பயிர் சாகுபடி செய்ய வேண்டுமானால் எனக்கு நீ ரூ.50 ஆயிரம் தர வேண்டும் என்று கணேசன் கூறியுள்ளார். அதற்கு அவர் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியுள்ளார்.
கத்தியால் குத்தினார்
அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கணேசன், நாகேந்திரனை அசிங்கமாக திட்டி, மறைத்து வைத்திருந்த கத்தியால் வலது மார்பில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து நாகேந்திரனின் மனைவி மலர்கொடி செஞ்சி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.