மகன் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை


மகன் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை
x

கரூர் அருகே மகன் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர்

சாலை விபத்தில் மகன் பலி

கரூர் அருகே உள்ள வெங்ககல்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 43). நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மகன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார். அன்று முதல் சுப்பிரமணி மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை தின்று மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் மற்றும் அருகில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை உடனே மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தந்தை தற்கொலை

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மற்றொரு மகன் பரத் தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார். சாலை விபத்தில் மகன் இறந்த துக்கத்தில் தவித்து வந்த தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story