லாரி மோதி தந்தை- மகள் பலி
கண்டமங்கலம் அருகே லாரி மோதி தந்தை- மகள் பலியாகினர்.
விழுப்புரம்
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த சேனிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் நீலமேகம் (வயது 58). இவரும் இவருடைய மகள் தேன்மொழியும் (20) நேற்று மாலை ஒரு மோட்டார் சைக்கிள் புதுச்சேரி மாநிலம் திருக்கனூருக்கு சென்றுவிட்டு மீண்டும் அங்கிருந்து சேனிப்பேட்டைக்கு புறப்பட்டனர். இவர்கள் இரவு 9 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தை அடுத்த திருமங்கலம் நான்குமுனை சந்திப்பு அருகில் செல்லும்போது எதிரே வந்த லாரி, அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் நீலமேகமும், தேன்மொழியும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story