மகளிடம் தவறாக நடக்க முயன்ற தந்தை போக்சோ சட்டத்தில் சிறையில் அடைப்பு


மகளிடம் தவறாக நடக்க முயன்ற தந்தை போக்சோ சட்டத்தில் சிறையில் அடைப்பு
x

மகளிடம் தவறாக நடக்க முயன்ற தந்தை போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் மகளிடம் தவறாக நடக்க முயன்றதாக தந்தையை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:- இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். சம்பவத்தன்று இரவு கணவர் தனது மனைவியை தாம்பத்ய உறவுக்கு அழைத்துள்ளார். அதற்கு மனைவி வர மறுத்ததால், நீ வரவில்லையென்றால் பெற்ற மகளை தொடுவேன் என்று கூறி அவர் தூங்கி கொண்டிருந்த 16 வயதுடைய இளைய மகளிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து கணவருடன் தாம்பத்ய உறவுக்கு மனைவி சென்று விட்டாராம். மேலும் அந்த கணவர் தனது மனைவியை எப்போதும் சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தி வந்தாராம். இது தொடர்பாக மனைவி கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து சைல்டு லைன் மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் அலுவலர்கள் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி பாதுகாப்பு நலன் கருதி அச்சிறுமியை மீட்டு குழந்தைகள் இல்லத்தில் தங்க வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தையை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.


Next Story