6 குழந்தைகளின் தந்தை மர்ம சாவு
மரக்காணம் அருகே 6 குழந்தைகளின் தந்தை மர்ம சாவு வயலில் பிணமாக கிடந்தார்
விழுப்புரம்
மரக்காணம்
மரக்காணம் அருகே உள்ள தேவிகுளம் கிராமத்தில் உள்ள ஒரு வயலில் தலைக்குப்புற வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் இறந்து கிடந்தவர் செய்யாங்குப்பம் காட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்த பூபாலன்(வயது 36) என்பது தெரியவந்தது. ஆமை பிடிக்க சென்ற இடத்தில் சேற்றில் விழுந்து இறந்தாரா? அல்லது யாரேனும் அடித்துக்கொலை செய்து உடலை வயலில் வீசி சென்றனரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். பூபாலனுக்கு மல்லிகா என்ற மனைவியும், 5 மகள்கள், ஒரு மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story