தமிழ் தேசிய தந்தை அயோத்தி தாசர் பிறந்த நாள் விழா


தமிழ் தேசிய தந்தை அயோத்தி தாசர் பிறந்த நாள் விழா
x

தமிழ் தேசிய தந்தை அயோத்தி தாசர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

பெரம்பலூர்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் பெரம்பலூர் புதிய பஸ் நிலைய புரட்சியாளர் அம்பேத்கர் நடைபாதை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் தமிழ் தேசிய தந்தை அயோத்தி தாசரின் 178-வது பிறந்த நாள் விழா நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த விழாவுக்கு சங்கத்தின் தலைவர் துரைமுருகன் தலைமை தாங்கினார். பொருளாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வக்கீல் அணியின் மாநில துணை செயலாளர் இரா.சீனிவாசராவ், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயராமன், வி.சி.க. பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் பாஸ்கர், வி.சி.க. இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறையின் பெரம்பலூர் ஒன்றிய அமைப்பாளர் பால் நிலவன் மற்றும் சங்கத்தின் வியாபாரிகள் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தமிழ் தேசிய தந்தை அயோத்தி தாசரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் அவர்கள் அயோத்தி தாசரை வாழ்த்தி கோஷங்களை எழுப்பி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.


Next Story