மகளை கடத்தி சென்று திருமணம் செய்த காதலனின் தாயை வெட்டிக்கொன்ற காதலியின் தந்தை


மகளை கடத்தி சென்று திருமணம் செய்த காதலனின் தாயை வெட்டிக்கொன்ற காதலியின் தந்தை
x

மகளை கடத்தி சென்று திருமணம் செய்த காதலனின் தாயை வெட்டிக்கொன்ற காதலியின் தந்தை கைது செய்யப்பட்டார்.

கமுதி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா அபிராமம் அருகே உள்ளது பள்ளபச்சேரி .இந்த ஊரை சேர்ந்தவர் வினீத். அதே ஊரை சேர்ந்தவர் கண்ணாயிரம் மகள் காவ்யா.இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள்.

வினீத் காவ்யாவை 15 நாட்கள் முன்பு கடத்திச் சென்று திருமணம் செய்து உள்ளார். இதனால் காவ்யாவின் தந்தை கண்ணாயிரம் கோபத்துடன் இருந்துள்ளார்.

நேற்று இரவு 7 மணியளவில் கண்ணாயிரம் வினீத்தின் வீட்டுக்கு சென்று சண்டை போட்டு உள்ளார்.

அங்கு வினீத்தின் அம்மா ராக்கு மற்றும் ராக்கு மகள் முனீஸ்வரி ஆகியோரை வெட்டி உள்ளார். இதின் வினீத்தின் தாயார் ராக்கு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து அபிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணாயிரம் கைது செய்து உள்ளனர்.

1 More update

Next Story