பழுதடைந்த கைப்பம்புகளை சீரமைக்க வேண்டும்
பழுதடைந்த கைப்பம்புகளை சீரமைக்க வேண்டும்
பூதலூர் ஒன்றியத்தில் பழுதடைந்த கைபம்புகளை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கைப்பம்புகள்
தஞ்சை மாவட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சி பகுதிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் தேவைக்கு ஏற்ப கைப்பம்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.
சிறிய ஊராட்சி, பெரிய ஊராட்சி என பிரிக்கப்பட்டு அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் இதுபோன்ற கைப்பம்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மினி தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு அதில் மின்மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றி அதிலும் வழங்கப்பட்டு வருகிறது. கிராமப் பகுதிகளிலும் சிறியதும், பெரியதுமாக ஏராளமான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
பழுதடைந்த கைப்பம்புகள்
பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் ஒவ்வொரு ஊராட்சியிலும் குறைந்தபட்சம் 10 முதல் அதிகபட்சம் 50 வரை மொத்தம் 500-க்கும் மேற்பட்ட பழுதடைந்த கைப்பம்புகள் உள்ளன.
எனவே செயல்படாத கைப்பம்புகளை அகற்றி தேவைப்படும் இடங்களில் அங்கு குடிப்பதற்கு ஏற்ற தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்து கைப்பம்புகள் அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.