ஓபிஎஸ்-க்கு சாதகமான தீர்ப்பு - பட்டாசு வெடித்து ,இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஆதரவாளர்கள்


ஓபிஎஸ்-க்கு சாதகமான தீர்ப்பு - பட்டாசு வெடித்து ,இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஆதரவாளர்கள்
x
தினத்தந்தி 17 Aug 2022 12:31 PM IST (Updated: 17 Aug 2022 12:39 PM IST)
t-max-icont-min-icon

ஓபிஎஸ் ஆதரவாளர்கள்..அவரது இல்லம் முன்பு பட்டாசு வெடித்து ,இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..

சென்னை,

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் (ஜூலை) 11-ந்தேதி நடந்தது. இந்த கூட்டம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் ஒப்புதல் இல்லாமல் நடத்தப்படுவதாக கூறி ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதே கோரிக்கையுடன் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்துவும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை முதலில் விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உள்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

மீண்டும் விசாரணை இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த வழக்கை ஐகோர்ட்டு மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு பட்டியலிடப்பட்டது. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்படி, இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு பட்டியலிடப்பட்டது. இன்று தீர்ப்பு இந்த வழக்கை கடந்த 10 மற்றும் 11-ந்தேதிகளில் நீதிபதி விசாரித்தார். பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியிடப்படும் என அறிவிக்கபட்டதுஇந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் பிறப்பித்தார் . இன்று காலை 11.30 மணிக்கு தீர்ப்பு வழங்கபட்டது.

அ.தி.மு.க வின் ஜூன் 23 ந்தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். தனி கூட்டம் கூட்டக் கூடாது. பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாக தீர்ப்பு வந்ததால் , துள்ளி குதித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்..அவரது இல்லம் முன்பு பட்டாசு வெடித்து ,இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..


Next Story