அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரூர்

விலக்கு பெற வேண்டும்

மத்திய அரசின் தொழிலாளர் சட்ட தொகுப்பால் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தை காத்திடும் வகையில் தமிழக அரசு சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசிற்கு அனுப்பி அவற்றில் இருந்து விலக்கு பெற வேண்டும். தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.1,500 உயர்த்த வேண்டும். தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளிகளுக்கு எவ்வித பாகுபாடுமின்றி கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பணப்பயன்களை போன்றே அமைப்புசாரா மற்றும் ஓட்டுனர் நலவாரிய தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

ஆர்ப்பாட்டம்

வெளிமாநில தொழிலாளர்களை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்வதைப்போல் பிற அமைப்புசாரா மற்றும் ஓட்டுனர் நலவாரியத்திலும் தொழிலாளர்களை பதிவு செய்யப்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று வெண்ணைமலை தொழிலாளர் நல அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு, அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கரூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். இதில் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.


Next Story