சத்துணவு-அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலை மறியல்


சத்துணவு-அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலை மறியல்
x

சத்துணவு-அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர்

தமிழ்நாடு சத்துணவு-அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று மாநில அளவிலான சாலை மறியல் நடைபெற்றது. அதன்படி அரியலூரில் அண்ணா சிலை அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தமிழரசன், மாவட்ட பொருளாளர் கோவிந்தசாமி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். இதில் சிறப்பு ஓய்வூதிய தொகையாக ரூ.6,750 வழங்க வேண்டும். அரசுத்துறை காலி பணியிடங்களில் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும் என்ற 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 28 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story