தூத்துக்குடி சேதுபாதை சாலை வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அனைத்து வியாபாரிகள் சங்கக்கூட்டம்


தூத்துக்குடி சேதுபாதை சாலை வணிகர் சங்கங்களின் பேரமைப்பு  அனைத்து வியாபாரிகள் சங்கக்கூட்டம்
x
தினத்தந்தி 4 Dec 2022 6:45 PM GMT (Updated: 4 Dec 2022 6:45 PM GMT)

தூத்துக்குடி சேதுபாதை சாலை வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அனைத்து வியாபாரிகள் சங்கக்கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி வடபாகம் சேதுபாதை சாலை வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அனைத்து வியாபாரிகள் சங்கக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு சங்க தலைவர் திருமால் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மகாலிங்கம், செயலாளர் பழனி, பொருளாளர் மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சேதுபாதை சாலை அனைத்து வியாபாரிகள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.கூட்டத்தில் வருகிற 16-ந் தேதி நடைபெறும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மண்டல செயற்குழு கூட்டத்தில் சேது பாதை சாலை வியாபாரிகள் திரளாக கலந்து கொள்வது, அன்றைய தினம் சேது பாதை சாலை சங்க கட்டிடத்தில் கொடியேற்ற வருகை தரும் மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் துணைச் செயலாளர் ஸ்டாலின், ஆலோசகர்கள் அழகுமுத்து, சாந்தகுமார், கோபால், வெற்றிவேல் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story