பெண் துப்புரவு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


பெண் துப்புரவு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 3 Jun 2023 12:15 AM IST (Updated: 3 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மதுபோதையில் கணவர் தகராறு செய்ததால் பெண் துப்புரவு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

மதுபோதையில் கணவர் தகராறு செய்ததால் பெண் துப்புரவு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுபோதையில் தகராறு

நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி (வயது 57). இவரது மனைவி வேலம்மாள் (54). கணவன், மனைவி இருவரும் மாநகராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தனர். இவர்களது 3 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. மகள்களின் திருமணத்திற்காக மாடசாமி பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் மாடசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனை மனைவி வேலம்மாள் கண்டித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மாடசாமி மது போதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரிடம் மனைவி வேலம்மாள், 'மகள்களின் திருமணத்துக்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளோம். அந்த கடனை அடைக்காமல், சம்பாதிக்கும் பணத்தை மது குடித்து வீணடிப்பது சரியில்லை' என கூறி அழுதார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தற்கொலை

இதில் மனமுடைந்த வேலம்மாள் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட மாடசாமி கதறி அழுதார்.

இதுபற்றி தகவல் அறிந்த வடசேரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story