பெண் பாலியல் பலாத்காரம்
பொள்ளாச்சி அருகே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மனநிலை பாதித்த பெண்
பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண் தனது தந்தையுடன் வசித்து வருகிறார். அந்த பெண் கடந்த சில ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பெண் திடீரென்று வாந்தி எடுத்ததால் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அவரது தந்தை அழைத்து வந்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் கடந்த 28-ந் தேதி அந்த பெண்ணின் தந்தை சமையல் செய்து விட்டு வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். அவர், மதியம் 2 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்த போது அந்த பெண்ணை காணவில்லை. 30-ந் தேதி அந்த பெண் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தார்.
வாலிபர் கைது
அப்போது அந்த பெண்ணை தந்தை எங்கு சென்றாய் என்று திட்டினார். அதற்கு அவர் தன்னை சிலர் கற்பழித்து விட்டதாக கூறியதாக தெரிகிறது. மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் மகள் கூறுவதை
தந்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அந்த பெண் 3-ந் தேதி வாந்தி எடுத்ததால் சந்தேகத்தின் பேரில் கிணத்துக்கடவு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை பெற்று, பின் மேல்சிகிச்சைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தது தெரியவந்தது.
பின்னர் அந்த பெண்ணிடம் போலீசார் விசாரித்த போது, வடக்கிபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றதாகவும், அங்கு அவர் இல்லாததால் அதே பகுதியை சேர்ந்த ஆனந்த குமார் (31) என்பவர் தனது வீட்டிற்கு அழைத்து சென்று உள்ளார். இரவு அவருடைய மனைவி குழந்தைகள் சாப்பிட்டு விட்டு தூங்கி விட்டனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ஆனந்தகுமார், அந்த பெண்ணை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்தகுமாரை கைது செய்தனர்.