சென்னை எழும்பூரில் மரம் முறிந்து விழுந்து கர்ப்பிணி பெண் காவலர் காயம்..!


சென்னை எழும்பூரில் மரம் முறிந்து விழுந்து கர்ப்பிணி பெண் காவலர் காயம்..!
x
தினத்தந்தி 13 Jun 2023 11:58 AM IST (Updated: 13 Jun 2023 12:07 PM IST)
t-max-icont-min-icon

சென்னை எழும்பூரில் மரம் முறிந்து விழுந்து, கர்ப்பிணி பெண் காவலர் காயம் அடைந்துள்ளார்.

சென்னை,

எழும்பூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் கர்ப்பிணி பெண் காவலர் ஒருவர் தனது கணவருடன் சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் இருந்த ஒரு பெரிய மரம் திடீரென முறிந்து அவர்கள் மீது விழுந்தது.

இதில் பெண் காவலர் காயம் அடைந்தார். காவலரின் கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மரத்தை அகற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். சென்னை எழும்பூரில் கர்ப்பிணி பெண் காவலர் மீது மரம் முறிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story