கிணற்றில் குதித்து பெண் தற்கொலை


கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
x

சேந்தமங்கலம் அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். குழந்தையை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நாமக்கல்

சேந்தமங்கலம்

தற்கொலையா?

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள மின்னாம்பள்ளி அண்ணாநகர் பகுதியில் உள்ள சுமார் 50 அடி ஆழ கிணற்றில் நேற்று மாலை ஒரு பெண், குழந்தை யுடன் குதிப்பதை அப்பகுதியினர் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.அதைத்தொடர்ந்து அவர்கள் நாமக்கல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து சில மணி நேரங்களில் தாயின் உடலை மீட்டனர். அதன்பிறகு குழந்தையின் உடலை தேடி வருகின்றனர்.

போலீஸ் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் தற்கொலை செய்து கொண்டவர் கீதா (வயது 21) என்பதும் குழந்தை மித்திரன் தேவ் (2) என்பதும் தெரிந்தது. மேலும் கீதாவின் கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தார் என்பதும் தெரியவந்தது.

மேலும் குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். குழந்தையுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


Next Story