பெண் தற்கொலை
பெண் தற்கொலை செய்துகொண்டார்.
சிவகங்கை
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி மேல்மலை குன்று பகுதியில் உள்ள மேல்மலை நகரை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி கவிதா(வயது 45). இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்த கணேசன் கடந்த சில மாதங்களாக வீட்டில் இருந்து வந்தாராம். கவிதா கூலி வேலைக்கு சென்று வந்தார். இதற்கிடையே கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் கவிதா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story