தூக்குப்போட்டு பெண் தற்கொலை
கோத்தகிரி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்டார்.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே கெங்கரை சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி சுந்தரி (வயது 37). இவர் தனியார் தேயிலை தொழிற்சாலையில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சுந்தரி தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கில் தொங்கினார். சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடிச் சென்று பார்த்தபோது, தூக்குப்போட்ட நிலையில் சுந்தரி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுந்தரியை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனேவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கணேசன் சோலூர்மட்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.