தூக்குப்போட்டு பெண் தற்கொலை
மயிலாடுதுறையில், தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்
மயிலாடுதுறை கூறைநாடு சுப்பிரமணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்குமார். ஓட்டல் தொழிலாளி. இவரது மனைவி தங்கலட்சுமி(வயது 36). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ரமேஷ்குமார், தனது சொந்த ஊரான திருவாரூர் அருகே ஆண்டிப்பந்தல் கிராமத்தில் உள்ள கோவில் திருவிழாவிற்கு குடும்பத்துடன் செல்லவேண்டும் என்று மனைவியிடம் தெரிவித்துள்ளார். அதற்கு தங்கலட்சுமி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் 2 பெண் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ரமேஷ்குமார் கோவில் திருவிழாவிற்கு சென்று உள்ளார். இதனால், ஆத்திரத்தில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தங்கலட்சுமி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தங்கலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தங்கலட்சுமியின் தாய் வேம்பு கொடுத்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.