பெண் தூக்குப்போட்டு தற்கொலை
வாணாபாடியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாணாப்பாடி வசந்தம் அவென்யூ குடியிருப்பை சேர்ந்த மாற்றுத்திறனாளி சங்கர்(வயது 37). இவரது மனைவி ஆதிலட்சுமி (30). ஆந்திர மாநிலம் சித்தூர் காணிப்பாக்கம் பகுதியை பூர்வீகமாக கொண்ட ஆதிலட்சுமி கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை பிரிந்து, மாற்றுத்திறனாளியான சங்கரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். திருமணமாகி 3 ஆண்டுகள் ஒன்றாக வசித்து வந்த நிலையில் அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் மனமுடைந்த ஆதிலட்சுமி நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆதிலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.