உர உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் ஆலோசனை கூட்டம்

விழுப்புரத்தில் உர உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
விழுப்புரம்
விழுப்புரம்,
தமிழ்நாடு உர உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், விவசாயிகள் பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அப்துல்ஹக்கீம் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் யாசின், அலாவுதீன், அன்சாரி, சர்புதீன், சுகர்னோ, லுக்மான், ரமணாரெட்டி, நிர்மல் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், உர விற்பனையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் உர உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், விவசாயிகளை உள்ளடக்கிய கட்டமைப்பை உருவாக்குவது, விவசாயத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவது, உழவர்களுக்கு தரமான உரங்களை வழங்கி அவர்களது வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க பாடுபடுவது, அரசுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே இணைப்பு பாலத்தை உருவாக்குவது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
Related Tags :
Next Story






