ரெயிலில் 1344 டன் உரங்கள் வந்தது
தூத்துக்குடியில் இருந்து தர்மபுரிக்கு ரெயில் மூலம் 1344 ஏக்கர் உரம் வந்தது.
தூத்துக்குடியில் இருந்து தர்மபுரிக்கு ரெயில் மூலம் 1344 ஏக்கர் உரம் வந்தது.
உரம் வந்தது
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பருவ மழை பரவலாக பெய்தது. இதனால் விவசாயப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் விவசாயிகளின் உர தேவையை பூர்த்தி செய்வதற்காக தூத்துக்குடியில் இருந்து தர்மபுரிக்கு ரெயில் மூலம் 1344 டன் உரங்கள் வந்தது.
இதன்படி 512 டன் யூரியா, 512 டன் காம்ப்ளக்ஸ், 320 டன் ட.ஏ.பி. உரங்கள் வந்தது. இந்த உரங்களை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உரக்கடைகளுக்கு பிரித்து அனுப்பும் பணி வேளாண்மை இணை இயக்குனர் விஜயா மேற்பார்வையில் நடைபெற்றது.
பயனடைய வேண்டும்
இந்த உரங்களை பிரித்து லாரிகளில் ஏற்றி அனுப்பும் பணியை வேளாண் தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் தாம்சன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது தர்மபுரி மாவட்ட விற்பனை அலுவலர் ரகுவரன், மொத்த விற்பனையாளர் குமாரசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி விற்பனை முனைய கருவி மூலம் அரசு மானிய உரங்களை பெற்று பயனடைய வேண்டும் என்று வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.