சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா


சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா
x

தர்மபுரி அன்னசாகரத்தில் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் கூழ் ஊற்றி வழிபட்டனர்.

தர்மபுரி

தர்மபுரி அன்னசாகரத்தில் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா கரகம் அழைத்தலுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, வழிபாடுகள் மற்றும் துள்ளு-பானகம் படைக்கப்பட்டது. பின்னர் ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றியும், பொங்கல் வைத்தும் சிறப்பு வழிபாடு நடத்தினர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (புதன்கிழமை) காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், அம்மன் திருவீதி உலாவும், மாவிளக்கு ஊர்வலமும் நடக்கிறது. பின்னர் அம்மனுக்கு மாவிளக்கு படைத்தல் மற்றும் கும்ப பூஜை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.


Next Story