பெரிய மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா


பெரிய மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா
x

கட்டிகானப்பள்ளி பெரிய மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அடுத்த கட்டிகானப்பள்ளி மேல்புதூரில் உள்ள பெரியமாரியம்மன் கோவில் ஆடி திருவிழா நடந்தது. விழாவையொட்டி தினமும் பூஜைகள் நடந்தன. விழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம் கங்கையில் புனித நீராடி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, ஊர்வலம் செல்லுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பெண் பக்தர்கள் மாவிளக்கு ஊர்வலம் எடுத்து வந்தனர். பின்னர் கோவில் முன்பு சூலம் போடுதல் நிகழ்ச்சி நடந்தது. மாலை தீ மிதி விழா நடந்தது. முன்னதாக சாமி பல்லக்கில் தீ குண்டத்தில் இறங்கியது. பின்னர் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


Next Story