பவானி காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் காலிங்கராயனுக்கு கார்த்திகை தீப ஆராதனை; நாளை மறுநாள் நடக்கிறது


பவானி காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் காலிங்கராயனுக்கு கார்த்திகை தீப ஆராதனை; நாளை மறுநாள் நடக்கிறது
x

பவானி காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில், காலிங்கராயனுக்கு கார்த்திகை தீப ஆராதனை நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

ஈரோடு

பவானி காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில், காலிங்கராயனுக்கு கார்த்திகை தீப ஆராதனை நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

கார்த்திகை தீப ஆராதனை

காலிங்கராயன் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில், காலிங்கராயன் வாய்க்காலை வெட்டிய காலிங்கராயனுக்கு சிறப்பு செய்யும் வகையில், கார்த்திகை தீப ஆராதனை நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. மேலும் நீர் பாதுகாப்பு, விழிப்புணர்வு நிகழ்ச்சியும், எக்ஸல் என்ஜினீயரிங் கல்லூரி சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாமும் நடைபெறுகிறது.

பவானி காலிங்கராயன் பாளையம் காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் காலை 10 மணி முதல் ஒரு மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு 36-வது பட்டத்து வாரிசு அருண் காலிங்கராயர், 37-வது பட்டத்து வாரிசு சித்தார்த் காலிங்கராயர் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

திருக்கோடி தீபம்

தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்க தலைவர் வக்கீல் சுபி.தளபதி, பாரதீய ஜனதா கட்சியின் விவசாய அணி மாநில துணை தலைவரும், குளூர் கூட்டுறவு கடன் சங்க தலைவருமான டி.தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, திருக்கார்த்திகை திருக்கோடி தீபம் ஏற்றி வைக்கிறார். பா.ஜ.க. விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ், ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் ஆகியோர் நினைவு பரிசுகள் வழங்குகிறார்கள்.

இதில் காலிங்கராயன் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் பாலகுமார், தலைவர் பி.கே.சேதுராஜ், செயலாளர் ஏ.நல்லசாமி, வி.ஆர்.கார்மேகம் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், மாணவ -மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை காலிங்கராயன் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்க நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.


Next Story