திம்மராயசாமி கோவில் திருவிழா


திம்மராயசாமி கோவில் திருவிழா
x
தினத்தந்தி 5 Feb 2023 6:45 PM GMT (Updated: 5 Feb 2023 6:46 PM GMT)

பாகலூர் அருகே திம்மராயசாமி கோவில் திருவிழாவில் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

பாகலூர் அருகே, பேரிகை சாலையில் குடிசெட்லு கிராமத்தில் திம்மராயசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா கடந்த 1-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு ஹோமங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக, அதிகாலையில் சுப்ரபாத சேவை, சாமிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில், சாமி எழுந்தருளினார். பின்னர் அங்்கு திரண்டு இருந்த பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். விழாவையொட்டி, ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர், சுண்டல், பஞ்சாமிர்தம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story