பூக்குழி திருவிழா


பூக்குழி திருவிழா
x
தினத்தந்தி 6 April 2023 12:15 AM IST (Updated: 6 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் காளியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் முத்துராமலிங்கபுரம் தெருவில் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமைவாய்ந்த இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பூக்குழி திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான பூக்குழி திருவிழா கடந்த 28-ந்தேதி கால் நாட்டுகளுடன் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். பங்குனி பூக்குழி கொடை விழாவை முன்னிட்டு காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

நேற்று முன்தினம் இரவு 25 பக்தர்கள் ஐந்து முறை பூக்குழி இறங்கினர். முன்னதாக காலை பால்குடம் வீதி உலாவும், மதியம் உச்சிக்கால பூஜை, அதனை தொடர்ந்து அன்னதானமும், மாலை பொங்கலிடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



1 More update

Next Story