வீரஅழகர் கோவில் சித்திரை திருவிழா
மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
மானாமதுரை
மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
சித்திரை திருவிழா
மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். விழா நாட்களின் போது தினந்தோறும் சுவாமி பல்வேறு மண்டகப்படிகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா செல்வது வழக்கம்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நேற்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதை முன்னிட்டு உற்சவருக்கு 11 வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் மண்டபத்திற்கு சாமி எழுந்தருளினார்.
எதிர்சேவை
அதனை தொடர்ந்து அர்ச்சகர் கோபி மாதவன் மூலவர் சுந்தரராஜ பெருமாள் எனும் வீர அழகருக்கும், உற்சவருக்கும் கையில் காப்பை கட்டினார். பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. இந்த விழாவில் மானாமதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான எதிர்சேவை வருகிற 4-ந் தேதியும், அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி 5-ந் தேதியும், நிலாச்சோறு நிகழ்ச்சி 6-ந் தேதியும் நடைபெற உள்ளது.